சூனேம் ஊரிலுள்ள ஸ்திரீயின் மகன் தலைநோவினால் இறந்து போனான். அப்பொழுது அவள் எலிசாவின் அறைக்குச் சென்று அவருடைய கட்டிலில் அவளுடைய மகனை வைத்து அறையைப் பூட்டி கர்மேல் பர்வதத்திலிருக்கிற எலிசாவிடம் சென்று விடாப்பிடியாக அவரைக் கூட்டிக் கொண்டு வந்தாள். எலிசா அறையைப் பூட்டி கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து, கிட்டபோய் தன் வாய் பிள்ளையின் வாயின் மேலும், தன் கண்கள் அவன் கண்களின் மேலும், தன் உள்ளங்கை அவன் உள்ளங்கைகளின் மேலும் படும்படியாக அவன் மேல் குப்புறப் படுத்துக் கொண்டான். அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது – 2இரா 4:18 –37