1. 2சாமு 22:16 “கர்த்தருடைய … நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
2. யோபு 4:9 “தேவனுடைய சுவாசத்தினாலே அநியாயத்தை உழுகிறவர்களும், தீவினையை விதைக்கிறவர்களும் அழிந்து, கர்த்தருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.”
3. ஏசா 11:4 “கர்த்தர் தன் வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.”
4. ஏசா 30:28 “நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப் போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப் போலவும் இருக்கும்.”