Menu Close

சீரியப்படைகள் கேட்ட இரைச்சல், அதனால் நடந்தது

சீரியராஜாவாகிய பெனாதாத் சமாரியாவை முற்றுகை போட்டான். சமாரியாவில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று. ஆண்டவர் சீரியாவின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சல்களையும், குதிரைகளின் இரைச்சல்களையும், மகா இராணுவத்தின் இரைச்சல்களையும் கேட்கப் பண்ணினதால் அவர்கள் “இதோ நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின்ராஜா எகிப்தின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாக கூலி பொருந்தினான்” என்று சொல்லி இருட்டோடு எழுந்திருந்து ஓடிப்போய் தங்கள் கூடாரங்களையும், தங்கள் குதிரைகளையும், தங்கள் கழுதைகளையும், தங்கள் பாளையத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாய் விட்டு தங்கள் பிராணன் தப்பும்படி ஓடிப்போனார்கள் – 2இரா 7:1- 7

Related Posts