Menu Close

சில மனிதரின் வாழ்வுப் பாடங்கள்

1. ரூபன்: உரிமைக்குரியவராய் பிறந்தால் மட்டும் போதாது, அதற்கேற்ப வாழ்வை அமைத்தால் தான் நித்தியஆசீர்களுக்குச் சொந்தக்காரராக முடியும் – ஆதி 35:22,49:3, 4
2. ஆரோன்: தேவ ஊழியர்களை முழுமையானவர்களாய் எண்ணிவிடுவது தவறு. அதேநேரத்தில் தேவஊழியர் பாவத்தில் தொடர்வது மாபெரும் தவறு – யாத் 4 – எண் 20
3. நாதாப்: தேவப்பணியில் சுயவிருப்பங்களுக்கு ஏற்ப நடப்பது ஆபத்தான விளையாட்டு – லேவி 10
4. பினெகாஸ்: தேவப்பணியில் அனலாக இருந்தால் தேவனும் ஆசீர்வதிக்கத் தவறுவதில்லை – எண் 25
5. கோராகு: தேவனுக்கும் அவரது பிரமாணங்களுக்கும் எதிரான கலகங்கள் வெற்றி பெறுவதில்லை – எண் 16
6. யோசுவா: சரியான துணிச்சல் தேவனிடமிருந்தே வரும். (யோசுவா நூல்)
7. சவுல்: தேவனைப் பின்பற்றுவதாகக் கூறியும் அதற்கேற்ப வாழாதோர் தேவன் அருளும் திறமையை வீணாக்குவர் – 1சாமு 15:26
8. யோனத்தான்: உண்மையான ஆன்மீக நட்பின் ஆழம் பெரிது. எதையும் தியாகம் செய்ய அது தயங்காது – 1சாமு 14 –31

Related Posts