முரட்டாட்டம் பண்ணுதலும், பொருளாசையும் விக்கிரக ஆராதனைக்குச் சமமாகும். 1சாமு 15:23, எபே 5:5 கொலோ 3:5 பொருளின் மேல் ஆசை வைப்பது பாவமாகும். பணக்காரராயிருந்தும் பொருளாசையின்றி கர்த்தரை அதிகமாகத் தேடின ஆபிரகாம், தாவீது போன்றோரும் உண்டு. முப்பது வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்ட யூதாஸ் போன்றோரும் உண்டு. அவரவர் வாழ்க்கைக்குத் தேவையான பொருளைச் சரியாகச் சம்பாதிப்பது தேவை தான். ஆனால் மிதமிஞ்சிய ஆசை கொண்டு பொருள் ஒன்றே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவன் பொருளாசை உள்ளவன்.