Menu Close

சிலர் கண்ணீர் சிந்தியதற்கான காரணங்கள்

1. பேதுரு இயேசுவை மூன்று தடவை மறுதலித்ததால் பாவ உணர்வினால் மனங்கசந்து அழுதான் – லூக் 22:61, 62
2. யோபுவின் சிநேகிதர் அவனைப் பரிகாசம் பண்ணியதால் தேவனை நோக்கிக் கண்ணீர் விட்டார் – யோபு 16:20
3. அமலேக்கியர் தாவீதின் குடும்பத்தாரையும், அவனோடிருந்தவர்களையும் சிறைபிடித்து, சிக்லாகு பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்தனர். அதனால் தாவீதும், அவனோடிருந்தவர்களும் தங்களுக்குப் பலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதனர் – 1சாமு 30:4
4. எசேக்கியா ராஜாவிடம் ஏசாயா தீர்க்கதரிசி “நீர் மரித்துப் போவீர்” என்று கூறியவுடனே எசேக்கியா சுவர்ப்புறமாகத் திரும்பி கர்த்தரை நோக்கி அழுதான் – ஏசா 38:3
5. பிசாசின்பிடியில் அகப்பட்ட மகனுக்காக தகப்பன் கண்ணீர் விட்டு அழுதான் – மாற் 9:24

Related Posts