சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் எழுபது ஆண்டுகளுக்குப்பின் எருசலேமுக்குத் திரும்பினார்கள். கோரேஸ்ராஜா அதற்கான ஆணை பிறப்பித்த போதிலும் சிறைபிடிக்கப்பட்ட எல்லா யூதர்களும் திரும்பிச் செல்லவில்லை. ஒரு பெரும் கூட்ட யூதர்கள் பாபிலோனில் இருந்து விட்டார்கள். எருசலேமுக்குச் சென்றவர்களில் ஒரு கூட்டம் ஆலயம் கட்டுவதற்காக செருபாபேலோடு சென்றார்கள். மற்றொரு கூட்டம் எஸ்றாவோடு சென்றார்கள். இந்த இரு யாத்திரைகளுக்கிடையில் சுமார் அறுபது வருட இடைவெளி காணப்பட்டது. இந்த இடைவெளி காலத்தில் எஸ்தர் பெர்சியாவின் ராணியாக்கப்பட்டாள்.