Menu Close

சிறிய பொருட்களால் நடந்த பெரிய காரியங்கள்

1. மோசேயின் கோல்: மோசேயின் கோல் பாம்பாக மாறினது. எகிப்தில் வாதைகளை வருவித்தது. அந்தக் கோலினால் கன்மலையை அடித்த போது இஸ்ரவேலருக்கு தண்ணீர் பாய்ந்து வந்தது – யாத் 4:3 7:9 –20, 8:5, 16, 17, 9:23, 10:13, 14:16 17:5, 9 எண் 20:8 –11
2. ஆரோனின் கோல்: அது துளிர்த்து பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது எண் 17:1 – 10
3. சம்காரின் தாற்றுக்கோல்: அறுநூறு பெலிஸ்தியரை சம்கார் தாற்றுக்கோலால் முறியடித்தான் – நியா 3:31
4. யாகேலின் கூடார ஆணி: யாகேல் பராக்கிரமசாலியாகிய சிசெராவைக் கூடார ஆணியால் நெற்றியில் அடித்து கொன்று போட்டாள் – நியா 4:12 – 22, 5:24 – 31
5. கிதியோனின் மண்பாண்டங்கள்: கிதியோனின் மண்பாண்டங்கள் உடைக்கப் பட்ட போது மீதியானியர் தோற்கடிக்கப் பட்டனர் – நியா 7:16 – 25
6. கழுதையின் பச்சைத் தாடை எலும்பு: சிம்சோன், பெலிஸ்தியர் ஆயிரம் பேரை கழுதையின் பச்சைத் தாடை எலும்பால் கொன்று போட்டான் – நியா 15:14, 15
7. மோசேக்குக் காண்பிக்கப்பட்ட மரம்: மாராவின் கசப்பு தண்ணீரில் மோசே காண்பித்த மரத்தை போட்ட போது அது மதுரமான தண்ணீராயிற்று – யாத் 15:22 – 25
8. பினெகாசின் ஈட்டி: சிம்ரி மீதியானிய ஸ்திரீயுடன் விபச்சாரம் பண்ணினான். அப்பொழுது பினேகாஸ் இருவரையும் குத்திப் போட்டான். அதனால் வாதை நின்றது – எண் 25:6 – 18
9. எலிசா வெட்டிப் போட்ட மரக்கொம்பு: எலிசா கொம்பை வெட்டி எறிந்த போது தண்ணீரில் விழுந்து கோடாரி மிதந்து வந்தது – 2 இரா 6:1 – 7
10. ராகாபின் ஜன்னலில் கட்டியிருந்த சிவப்பு நூல்: எரிகோவை அழிக்கும் போது சிவப்பு நூல் கட்டியிருந்த ராகாப் வேசியின் விட்டார் காப்பாற்றப் பட்டார்கள் – யோசு2:1 – 22, 6:22, 23
11. உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பம்: கொள்ளிவாய் சர்ப்பத்தால் கடிக்கப்பட்டு விஷமேறினவர்கள் வெண்கல சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைத்தார்கள் – எண் 21:6 – 9
12. ஏகூத்தின் நீளமான கத்தி: மோவாபின் ராஜாவாகிய எக்லோனின் வயிற்றில் ஏகூத் இந்தக் கத்தியைக் குத்தி சாகடித்தான் – நியா 3:15 – 25
13. எலிசாவின் சால்வை: எலிசா தன் சால்வையை முறுக்கி யோர்தான் நதியின் தண்ணீரில் அடித்தான். தண்ணீர் இருபக்கமாகப் பிரிந்தது – 2 இரா 2:7, 8
14. தேவனுடைய பெட்டிக்கு முன் தாகோன்: விக்கிரகம் விழுந்து நொறுங்கிப் போயிற்று – 1சாமு 5:1 – 12
15. தாவீதின் கையிலிருந்த கூழாங்கல்: தாவீதின் கையிலிருந்த கவண் கல்லால் பெலிஸ்திய வீரனான கோலியாத்தை கீழே விழத் தள்ளினான் – 1 சாமு 17:40 – 54
16. பவுலின் சரீரத்திலிருந்த உறுமால்களும், கச்சைகளும்: பவுலிடமிருந்த உறுமால்களையும், கச்சைகளையும் வியாதிக்காரர் மேல் போட்ட போது அவர்கள் சுகமடைந்தனர் – அப் 19:11, 12

Related Posts