சிரியா தேசத்தின் தலைநகரம் தமஸ்கு. இத்தேசம் இஸ்ரவேலை மிகவும் நொறுக்கியது. குறிப்பாக ஆசகேலின் காலத்திலும் அவரது மகனான பெனாதாத்தின் காலத்திலும் இது மிகவும் கோடூரமாக இருந்தது. அதனால் தேவன் ஆசகேலின் வீட்டை தீக்கொளுத்துவார், அது பெனாதாத்தின் அரண்மனையைப் பட்சிக்கும். கர்த்தர் தமஸ்குவின் தாழ்ப்பாழ்களை உடைத்து குடிகளை ஆவேன் பள்ளத்தாக்கிலிருந்தும், பெத்ஏதேன் அரண்மனையிலிருந்தும் அழிப்பதுடன் சீரியரின் பழைய அடிமை இடமான கீருக்கு சிறைப்பட்டுச் செல்ல வைப்பார் – ஆமோ 1:3 –5