1. சிம்சோன் பெலிஸ்திய பெண்ணை விவாகம் பண்ணி அங்குள்ள வாலிபருக்கு விருந்து பண்ணி ஒரு விடுகதையைக் கூறினான். அவர்கள் ஜெயித்தால் அவர்களுக்கு முப்பது மாற்று வஸ்திரங்களையும், முப்பது துப்பட்டிகளையும் தருவதாகவும், தான் ஜெயித்தால் அதைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினான். அவர்களுக்கு விடுவிக்க முடியாததால் சிம்சோனின் மனைவியிடம் “நீ அவனிடம் கேட்டு விடை சொல்லாவிட்டால் உன்னையும், உன் வீட்டையும் சுட்டெரிப்போம் என்றனர்.” அதனால் அவள் ஏழு நாட்களும் சிம்சோனிடம் கேட்டு அலட்டிக் கொண்டிருந்ததால் அதை அவளுக்கு விடுவித்தான். அதை அவள் ஜனங்களுக்குத் தெரிவித்ததால் சிம்சோன் தோற்றான் – நியா 14:17 – 19
2. சிம்சோன் தெலிலாள் என்ற வேசியிடம் சென்றான். பெலிஸ்தியர்கள் அவளிடம் சிம்சோனின் பலம் எதில் இருப்பதாகக் கூறினால் சன்மானம் தருவதாகக் கூறினர். எனவே அவள் ஓயாமல் சிம்சோனிடம் அதைக் கேட்டு அலட்டிக் கொண்டிருந்தாள். சிம்சோன் தன் பலத்தின் இரகசியத்தை அவளுக்குக் கூறினான். அவள் அதை பெலிஸ்தியரிடம் கூறி அவர்கள் சிம்சோனின் கண்களைப் பிடுங்கி, மாவரைக்க வைத்தனர் – நியா 16:4 – 22