Menu Close

சிம்சோன் செய்த அற்புதங்கள்

1. சிம்சோன் திம்னாத்திற்கு தன் தாய், தகப்பனுடன் சென்று கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு எதிராக வந்த பால சிங்கத்தை அவன் கையில் ஒன்றுமில்லாதிருந்தும் கர்த்தருடைய ஆவி அவன் மேல் இறங்கினதினால் ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போடுகிறது போல கிழித்துப் போட்டான் – நியா 14:5, 6
2. கழுதையின் தாடை எலும்பினால் பெலிஸ்தியர் ஆயிரம் பேரைக் கொன்றான் – நியா 15:16
3. பெலிஸ்தியர் இருந்த தாகோன் மண்டபத்துத் தூண்களை பலமாய்ச் சாய்த்து பிரபுக்களையும், ஜனங்களையும் மடியச் செய்தார் – நியா 16:28 –30
4. பெலிஸ்தியரின் வெள்ளாண்மையை அழிக்க 300 நரிகளைப் பிடித்து தீப்பந்தங்களை அவைகளின் வால்களில் கட்டி ஓடவிட்டு பெலிஸ்தியரின் வெள்ளாண்மையை அழித்தான் – நியா 15:4, 5

Related Posts