1. கேளாதே: நீதி 19:27 “அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.”
2. நினையாதே: நீதி 3:29 “அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.”
3. எண்ணாதே: நீதி 3:11 “நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே,”
நீதி 3:7 “நீ உன்னை ஞானியென்று எண்ணாதே;”
4. சொல்லாதே: நீதி 3:28 “உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.”
நீதி 24:29 “அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.”
நீதி 20:22 “தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே;”
5. பேசாதே: நீதி 24:28 “உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.”
6. சாராதே: நீதி 23:4 “சுயபுத்தியைச் சாராதே.”
7. சேராதே: நீதி 23:20 “மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே.”
8. விடாதே:
• நீதி 23:13 “பிள்ளையைத் தண்டியாமல் விடாதே;”
• நீதி 23:17 “உன் மனதைப் பாவிகளின் மேல் பொறாமைகொள்ள விடாதே.”
• நீதி 6:25 “உன் இருதயத்திலே பரஸ்திரீயின் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.”
• நீதி 4:13 “புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே;”
• நீதி 27:10 “உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே;”
9. இடங்கொடாதே: பிர 5:6 “உன் மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே;”
10. தாமதியாதே: பிர 5:4 “நீ தேவனுக்குப் பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதை செலுத்தத் தாமதியாதே;”
11. சம்மதியாதே: நீதி 1:10 “பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.”
12. கொள்ளாதே:
• பிர 7:9 “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே;”
• நீதி 24:1 “பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே;”
• நீதி 3: 31 “கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே;”
• நீதி 23:10 “திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.”
13. தள்ளாதே: நீதி 1:8 “உன் தாயின் போதகத்தை தள்ளாதே.”
14. நில்லாதே:
• நீதி 25:6 “பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.”
• பிர 8:3 “பொல்லாத காரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே;”
15. நடவாதே:
• நீதி 4:14 “தீயோருடைய வழியில் நடவாதே.”
• நீதி 22:24 “உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.”
16. விரும்பாதே: நீதி 20:13 “தூக்கத்தை விரும்பாதே,”
17. கொள்ளையிடாதே: நீதி 22:22 “ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே.”
18. எரிச்சலாகாதே: நீதி 24:19 “பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே;”
19. வழக்காடாதே: நீதி 3:30 “ஒருவன் உனக்கு தீங்கு செய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.”
20. விற்காதே: நீதி 23:23 “சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே;”