கர்த்தர் சாலமோனுக்கு இரண்டாம் தரம் தரிசனமாகி கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு வந்தால் ”இஸ்ரவேலின் சிங்காசனத்தின் மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற் போவதில்லை என்று தாவீதுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன். என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமற் போனால் நான் இஸ்ரவேலருக்குக் கொடுத்த தேசத்தில் அவர்களை வைக்காமல் நிர்மூலமாக்கி, இந்த ஆலயத்தை என் சமூகத்தை விட்டுத் தள்ளுவேன்.; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்கும் பழமொழியாகவும், வசைசொல்லாகவும் இருப்பார்கள்” என்றார் – 1இரா 9:2 – 9