நேபுகாத்நேச்சார் வைத்த சிலையை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வணங்காததால் ராஜா கடுங்கோபங் கொண்டு இராணுவத்தில் பலசாலியான புருஷர்களை அழைத்து அவர்களைக் கட்டி மிகவும் சூடான அக்கினிச் சூளையில் போட்டனர். சூளை மிகவும் சூடாக இருந்ததால் தூக்கிக்கொண்டு போன புருஷர்களை அக்கினிஜீவாலை கொன்று போட்டது.
ஆனால் ராஜா பார்த்துக் கொண்டிருக்கும் போது அக்கினிஜீவாலைக்குள் நாலுபேர் விடுதலையாகி உலாவுவதைக் கண்டார். அந்த நாலாவது ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருந்தது. ராஜா அக்கினிச்சூளையின் வாசலண்டையில் வந்து “உன்னதமான தேவனுடைய தாசர்களே வெளியே வாருங்கள்” என்றார். அவர்கள் வெளியே வந்தபோது, அவர்களுடைய சரீரங்களில் அக்கினி சேதப்படுத்தாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடம் வீசாமல் இருந்ததை தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கண்டனர். ராஜா உடனே “இம்மூவர்களுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்த பாஷைக்காரனும் துண்டித்துப் போடப்படுவான். அவனுடைய வீடு எருக்களமாக்கப்படும் என்றார் – தானி 3:14 – 29