சவுலும் சாலமோனும் தொடக்கத்தில் ராஜாவாக ஆட்சி புரிந்தவர்கள். இவர்களின் தொடக்கம் மிகச்சிறப்பாக இருந்தது. ஆனால் இவர்களின் முடிவு தேவனுக்கு பிரியமில்லாததாக முடிகிறது. இவர்களின் இருதயம் தேவனுக்கு முன்பாக தூய்மையாக இருக்கவில்லை. அது என்னவென்றால் “நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னை விட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான்” என்று கர்த்தர் சவுலைப் பற்றி சாமுவேலிடம் கூறினார். “சாலமோனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப் போல, தன் தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாயிருக்கவில்லை.” என – 1இரா 11 :4 ல் கூறியிருக்கிறது.