சவுல் பெலிஸ்தியரின் பாளையத்தைக் கண்டு பயந்து கர்த்தரிடத்தில் விசாரித்தான். ஆனால் கர்த்தரோ சொப்பனத்தினாலும், தீர்க்கதரிசனத்தினாலும், ஊரிமினாலும் உத்தரவு கொடுக்கவில்லை. எனவே சவுல் அஞ்சனக்காரியிடம் சென்று அவள் மூலமாக சாமுவேலை வரவழைத்தான். சவுல் சாமுவேலிடம் கேட்டதற்கு சாமுவேல் “கர்த்தர் உன்னை விட்டு விலகி உன் கையிலிருந்தது ராஜ்ஜியத்தைப் பறித்து, தாவீதுக்குக் கொடுத்து விட்டார். கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தியர் கையில் ஒப்புக்கொடுப்பார். நாளைக்கு நீயும், உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள் என்றார் – 1சாமு 28:4 – 19, 31:1 – 6