அமலேக்கியரை முறியடித்து அவர்களை முற்றிலுமாய்க் கொன்றுபோட வேண்டுமென்று கர்த்தர் சவுலுக்கு சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் கட்டளையிட்டார். சவுல் அமலேக்கியரை முறியடித்தான். ஆனால் கர்த்தர் சொன்னபடி அவர்களை முற்றிலும் அழிக்காமல் ஆடுமாடுகளில் கொழுமையானதை பலி செலுத்தும்படி உயிரோடே வைத்தான். சவுல் கர்த்தருக்குக் கீழ்ப்படியாததால் கர்த்தர் அவனைப் புறக்கணித்தார் – 1சாமு 15:1-35