1. லோத்தும், அவனது குமாரத்திகளும் சோதோமை விட்டு மலையில் போய் குடியிருந்தனர். அவர்கள் இருவரும் தகப்பன் மூலமாக சந்ததி உண்டாக நினைத்து லோத்துவுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து தகப்பனோடு சயனித்து இருவரும் கர்ப்பவதியானார்கள். இதற்கு “நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.” என்று அவர்கள் நினைத்தது தான் காரணம் – ஆதி 19:31-36
2. யூதாவின் மூத்த மகன் இறந்ததால், தாமார் கைம்பெண்னானாள். யூதாவின் மகன் சேலாவை தனக்குத் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்பதை அறிந்து, யூதா ஆடுகளை மயிர்கத்தரிக்க திம்னாவுக்கு வந்த பொழுது தாமார் திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்ததால். யூதா அவளைக் கண்டு வேசி என்றறிந்து ஆவலுடன் சேர்ந்தான். அவள் கர்ப்பவதியானாள். யூதாவுக்கு தான் சேர்ந்த வேசி தன்னுடைய மருமகள் என்று தெரியாது – ஆதி 38:14-18