Menu Close

சத்தங்கள்

1. மனித சத்தம்: சாலமோனின் மகனான ரெகொபெயாம் வயது முதிர்ந்தவர்களின் ஆலோசனையைக் கேட்காமல் வாலிபருடைய சொல்லைக் கேட்டு ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு போட்டான். அதனால் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் பத்து கோத்திரம் அவரை விட்டுப் பிரிந்து போயிற்று. இந்த மாதிரி சத்தங்களைக் கேட்க வேண்டாம் – 1இரா 12:1 – 16
2. சாத்தானின் சத்தம்: ஏவாள் சாத்தானின் சத்தத்தைக் கேட்டு தேவன் புசிக்கக் கூடாது என்று சொன்ன பழத்தைப் புசித்து ஆசீர்வாதத்தை இழந்தாள் – ஆதி 3:1 – 5
தாவீதை சாத்தான் தொகையிடும்படி ஏவி விட்டான் – 2சாமு 24:1 யோபுவுக்குத் தீங்கு செய்யும்படி சாத்தான் கர்த்தரோடு பேசினான் – யோபு 1:6 – 12 இயேசு உபவாசமிருந்த பின் சாத்தான் பேசினான் – மத் 4:1 யூதாஸின் உள்ளத்தில் சாத்தான் புகுந்து இயேசுவைக் காட்டிக் கொடுத்தான் – லூக் 22:3 இதே போன்ற சத்தங்களுக்கு செவி கொடுக்கக் கூடாது.
3. மனசாட்சியின் சத்தம்: பேதுரு இயேசுவை மறுதலித்து, சபித்து சத்தியம் பண்ணிய போது மனசாட்சியினால் மனங்கசந்து அழுதான் – மத் 26:75 இயேசுவை யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்குக் காட்டிக் கொடுத்தபின் “குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேனே” என்று மனசாட்சியினால் வாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டான் – மத் 27:3, 4 மனசாட்சி வாதிக்கப் படாமல் செயல்படுங்கள்.
4. தேவ சத்தம்: கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு சவுல் பவுலாக மாறி அப்போஸ்தலர் ஆனார். ஆபிரகாம் கர்த்தரின் சத்தத்தை கேட்டு கீழ்படிந்து விசுவாசத்தின் தகப்பனானான் – ஆதி 12:1, 2 அப் 9:1 – 4

Related Posts