சகரியா அளவு நூல் பிடித்திருந்த ஒரு மனிதனைக் கண்டான். அவர் கிறிஸ்துவாக இருக்க வேண்டும். அந்த புருஷனிடம் எங்கு போகிறீர் எனக் கேட்ட போது அவன் எருசலேமின் நீளத்தையும், அகலத்தையும் அளக்கப் போகிறேன் என்றான். வருங்காலத்தில் கர்த்தரின் ஆட்சியின் போது எருசலேம் தகுந்த மதிப்பைப் பெறும். கர்த்தர் தாமே அக்கினி மதிலாய் எருசலேமைச் சுற்றிலும் இருப்பார். மக்களின் மத்தியில் காணப்படும் தேவமகிமை அவரது பிரசன்னத்தால் நிரம்பிய ஆலயமாக அந்நகரத்தை மாற்றி விடும். வடதேசத்திலிருந்து ஓடி வருவார்கள் என்பது யூதர்கள் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பும்படிக்கு கொடுக்கப்பட்ட அடையாளம். அவர்கள் திரும்பி ஆலயப்பணியில் ஈடுபடுவர். இஸ்ரவேலில் மீதமிருந்த தேவமக்கள் தேவனது கண்ணின் கருமணியாகவும், அவருக்கு விலையேறப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இயேசு இப்பூமியில் அரசாளும் போது புறஜாதிமக்களும் இணைந்து தேவமக்களாவார்கள். அவர்கள் தேவபிரசன்னம் தங்கள் மத்தியில் இருக்கும் ஆசீர்வாதத்தையும், எருசலேமைத் தேவன் தனது பரிசுத்த நகரமாக தெரிந்து கொண்டதினால் கிடைத்த ஆசீர்வாதத்தையும் அடைவார்கள். எருசலேமின் நகர எல்லை விரிவாகும் – சக 2:1 – 13