மரக்காலில் அமர்ந்திருக்கிற ஓரு ஸ்திரீயை சகரியா பார்க்கிறான். இந்த ஸ்திரீ விக்கிரக ஆராதனைக்கும், எல்லாவித துன்மார்க்கத்துக்கும் அடையாளம். அவள் அந்த மரக்காலில் சிறைபட்டு கனமுள்ள ஈய மூடியால் மூடப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டாள். பாபிலோன் சாத்தானின் ஆதிக்கத்திலுள்ள தேவனற்ற உலக அமைப்பைக் குறிக்கிறது. தேவனது ஜனங்களில் காணப்பட்ட துன்மார்க்கர் தண்டிக்கப்படுவது மட்டுமல்லாமல் தேசத்திலிருந்து நீக்கப்படுவதும் வேண்டியதாயிருந்தது. உலகிலுள்ள தீய வியாபாரங்களுக்கு முடிவுகட்டும் நாள் விரைவில் வரும். இந்த இரண்டு ஸ்திரீகளைக் கொண்டுபோய் வீடுகட்டிக் கொடுத்தாலும், நிலைப்படுத்தினாலும், மத, வாணிபம், அரசியல்சார்ந்த உலக அமைப்பு அழிக்கப்படுவது உறுதி. வெளிப்படுத்தின விசேஷத்தில் சிநேயார் தேசத்தில் இருக்கும் வியாபார வீடு அழிக்கப்படுவதைப் பார்க்கிறோம் – வெளி 17, 18, சக 5:5 – 11