சகரியா இருபது முழ நீளமும், பத்து முழ அகலமுமாயிருக்கிற, இரண்டு பக்கமும் எழுதப்பட்ட ஒரு புஸ்தகச் சுருளை தன் தரிசனத்தில் பார்க்கிறார். இது இஸ்ரவேல் தேசத்தில் உள்ள பாவிகளுக்கு எதிராக வரும் தேவ நியாயத்தீர்ப்பையும், சாபத்தையும் குறிக்கிறது. இதில் இரண்டு பாவங்களைக் குறித்த தண்டனைகள் நினைவு படுத்தப்படுகின்றன. 1. திருட்டு 2. பொய்யாணை மேசியாவின் ஆளுகையில் இந்த தீர்ப்பு முழுமையாக நிறைவேறும். தீமை செய்யும் விசுவாசிகளின் தலைக்குமேல் தேவசாபம் பறந்து கொண்டிருப்பதை நாம் மறக்கக் கூடாது – சக 5:1 – 4