• சக 2:10 “சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப் பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
• சக 4:6 “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”
• சக 14:3, 4 “கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவது போல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.”
• “அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்கே எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒருபாதி வடபக்கத்திலும் ஒருபாதி தென்பக்கத்திலும் சாயும்.”