சகரியா தனது தரிசனத்தில் நாலு கொம்புகளைப் பார்த்தார். இவைகள் என்ன என்று தூதனிடம் கேட்ட போது தூதன் அவைகள் இஸ்ரவேலை உபத்திரவப் படுத்தும் நான்கு அரசுகள் என்றான். அசீரியா, எகிப்து, பாபிலோன், மேதியா, பெர்சியா ஆகியோருக்கு அடையாளமாக இந்தக் கொம்புகள் காட்டப்படுகின்றன. இந்த விலங்கு கொம்புகள் புறஜாதி அரசுகளின் வல்லமையைக் காட்டுகின்றன. லூக் 21:24ல் உள்ளவை நிறைவேறும்போது இஸ்ரவேல் அந்தக் கொம்புகளின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்படும். இந்த கொம்புகளின் காலம் நேபுகாத்நேச்சாரின் காலம் முதல் அர்மகெதோன் போர் வரை விரிவடையும்.
பின்பு சகரியா நான்கு தொழிலாளிகளைப் பார்த்தார். இந்த நான்கு தொழிலாளர்களும் ஒன்றையொன்று அழிக்கும், மூன்று அரசுகளும், புதிதாக வரும் நான்காவது அரசுமாகும். நான்காவது அரசு மேசியாவினுடையதாக இருக்கும் – தானி 2:45 அப்போது மேசியாவின் ஆயிரம் ஆண்டு அரசாட்சி அமையும். தேவமக்களை ஒடுக்குகிற எல்லாரும் கர்த்தரது நியாயத்தீர்ப்பின்கீழ் வந்தே தீருவோம் -சக 1:18 – 21