கோராகுவும் கூட்டத்தாரும் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக கலகம் பண்ணினார்கள். மோசேயைப் பார்த்து “கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்?” என்றார். இதைக்கேட்ட மோசே முகங்குப்புற விழுந்தான். கர்த்தர் யாரைத் தெரிந்து கொள்கிறார் என்று பார்க்க மோசே ஆலோசனை கூறினான். அதன்படி அவரவர் தங்கள் தங்கள் தூபக்கலசங்களை எடுத்துக் கொண்டு கர்த்தருடைய சன்னிதிக்கு முன் நின்றார்கள். ஜனங்களை அழிப்பதற்காக கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் சபையை விட்டு பிரிந்து போகச் சொன்னார். மோசே ஜனங்களுக்காக பரிந்து பேசினான். பின்பு மோசே, கோராகு தாத்தான், அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலங்களை விட்டு ஜனங்களை விலகிப் போகச் சொன்னான். ஜனங்கள் விலகின போது பூமி தன் வாயைத் திறந்து அவர்களையும், அவர்கள் வீடுகளையும், பொருட்களையும் விழுங்கிப் போட்டது. அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு தூபங்காட்டின 250 பேரையும் பட்சித்துப் போட்டது. மறுநாள் ஜனங்கள் முறுமுறுத்து “நீங்கள் ஜனங்களைக் கொன்று போட்டீர்கள்” என்றனர். கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங் கோபம் புறப்பட்டது. வாதையினால் பெரிய சங்காரம் உண்டாயிற்று. 14700 பேர் மடிந்தனர். ஊழியர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களுக்கு இந்த கோராகு கலகம் ஒரு எச்சரிப்பைக் கொடுக்கிறது – எண் 16:1-50