Menu Close

கோடிக்கல், கூடாரமுளை, யுத்தவில்

இவ்வேதப்பகுதியில் மேசியா கோடிக்கல், கூடாரமுளை, யுத்தவில் ஆகியனவாக உருவகிக்கப்படுகிறார்.
கோடிக்கல்: இது வரப்போகும் புதிய ராஜ்ஜியத்தில் கிறிஸ்து அஸ்திபாரமாக அமைவதைக் காட்டும். ஏசா 28:16 எபே 2:20 1பேது 2:6 – 8
கூடாரமுளை: கூடாரமுளை என்பது கூடாரத்தை அடித்து நிறுத்தும் பெரிய கூடார ஆணியையோ, கூடாரத்தின் நடுத்தூணில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணியையோ குறிக்கலாம். கூடாரத்தின் நடுத்தூணின் ஆணியில்தான் கூடாரவாசிகளின் விலைமதிப்புமிக்க ஆவணங்களும், பொருட்களும் தூக்கி விடப்பட்டிருக்கும் – ஏசா 22:24, 25. இது இஸ்ரவேலரின் மதிப்பு கிறிஸ்துவைச் சார்ந்து அமைந்திருப்பதைத் தெளிவாகக் காட்டும்.
யுத்தவில்: இது கிறிஸ்துவை வெற்றி வீரராகக் காட்டும்.

Related Posts