Menu Close

கைகளை வைக்கும் போது தேவன் கொடுக்கும் ஆசிகள்

1. கைகளினால் பாவநிவாரணம்: பாவம் செய்த மனிதன் ஒரு ஆட்டைக் கொண்டு வந்து தேவசமுகத்தில் தன் இரண்டு கைகளையும் ஆட்டின் மேல் வைத்து தான் அதுவரை செய்த பாவத்தை ஆட்டின் மேல் சுமத்துவான். அப்பொழுது அவன் ஆத்மாவிலே இருக்கும் பாவம் ஆட்டின் மேல் இறங்கும். அப்பொழுது ஆசாரியன் பாவநிவாரண பலியாக ஆட்டை பலிபீடத்தின் மேல் கிடத்தி அதன் கழுத்தை வெட்டி அவனை விடுதலையாக்குவான் – லேவி 16 :21, 4:23 – 26
2. கைகளினால் குணமாக்கும் வல்லமை: இயேசு சீடர்களைப் பார்த்து விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என்னவென்றால் “என் நாமத்தினால் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார் – மாற் 16:17, 18
3. கைகளினால் ஆசீர்வாதம்: மோசே தன்னுடைய கடைசி நாட்களில் 12 கோத்திரங்களையும் கைகளினால் ஆசீர்வதித்தார் – உபா 31, 32, 33 அதிகாரங்கள் ஈசாக்கு வயதான நாட்களில் யாக்கோபை கிட்டவரச்சொல்லி அவனைத் தொட்டு ஆசீர்வதித்தார் – ஆதி 27:27, 30 யாக்கோபுக்கு வயதானபோது யோசேப்பு தன் இரண்டு பிள்ளைகளையும் யாக்கோபிடம் கூட்டி வந்தார். யாக்கோபு அவர்கள் இருவர் தலைகளின் மேலும் கைகளை வைத்து ஆசீர்வதித்தார் – ஆதி 48:13
4. கைகளினால் அபிஷேகம்: பவுல் எபேசு பட்டணத்தில் விசுவாசுகளின் மேல் கைகளை வைத்து பரிசுத்தாவியைப் பெறச் செய்தார் – அப் 19:6
5. கைகளால் பிரதிஷ்டை: அந்தியோகியா சபையிலே உபவாசமிருந்து ஜெபம் பண்ணிக்கொண்டிருந்த பொழுது ஆவியானவர் அவர்களோடு இடைப்பட்டு “பவுலையும், பர்னபாவையும் தான் அழைத்த ஊழியத்திற்குப் பிரித்து விடுங்கள்” என்றார். அப்பொழுது அவர்கள் மேல் கைகளை வைத்து ஊழியத்திற்கு பிரதிஷ்டை பண்ணினார் – அப் 13:1 –3

Related Posts