Menu Close

குடும்பப் பிரச்சனைக்குக் கர்த்தர் கொடுத்த தண்டனை

ஆஸ்ரோத்தில் மிரியாமும், ஆரோனும் மோசேயின் மனைவியாகிய எத்தியோப்பிய ஸ்திரீயினிமித்தம் மோசேக்கு விரோதமாகப் பேசினார்கள். “கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.” எனவே கர்த்தர் மூன்று பேரையும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு வரச் சொன்னார். அங்கு அவர்களிடம் “என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன என்றார்.” இதனால் கர்த்தரின் கோபம் அவர்கள் மேல் மூண்டு மிரியாம் குஷ்டரோகியானாள். மோசே தேவனை நோக்கிக் கெஞ்சியதால் “ஏழு நாள் மட்டும் குஷ்டரோகியாயிருந்து பின் சரியாகும்” என தேவன் இரக்கம் காட்டினார் – எண் 12:1-15

Related Posts