Menu Close

கிதியோன் தலைவரான விதம்

கிதியோன், மீதியானியர் வயல்களை அறுவடை செய்யவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்குப் பயந்து இரகசியமாக போரடித்துக் கொண்டிருந்தான். தூதன் சந்திக்கும் வரை கிதியோன் எந்த தீரச் செயல்களும் செய்யவில்லை. கர்த்தருடைய தூதன் “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடிருக்கிறார்.” என்று தைரியப் படுத்தினான். கிதியானோடு 32000 பேர் கூடினார்கள். அதில் தண்ணீரை நக்கிக் குடித்த 300 பேரை மட்டும் போருக்குக் கூட்டிச் சென்றார். அவர்கள் மூன்று படைகளாகப் பிரிக்கப்பட்டு எக்காளம் ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைப் பிடித்து “கர்த்தரின் பட்டயம் கிதியோனின் பட்டயம்.” என்று ஆர்ப்பரித்தார்கள். மீதியானியர்கள் சிதறி ஓடினர். ஒரே இரவில் கிதியோன் ஆற்றல் மிக்க தலைவராக மாற்றப்பட்டார் – நியா 7 அதிகாரம்

Related Posts