Menu Close

காயீனைப் பற்றி

• காயீன் உலகில் பிறந்த முதல் மனிதன் – ஆதி 4:1

• முதன் முதலில் தன் தம்பியைக் கொன்ற கொலைகாரன் – ஆதி 4:8

• காயீன் ஆபேலுக்கு விரோதமாக எழும்பி கொலை செய்தான் -. ஆதி 4:8

• பூமியிலே அவன் சபிக்கப்பட்டிருப்பான், நிலத்தைப் பயிரிடும் பொழுது அது தன் பலனைக் கொடுக்காது, பூமியில் நிலையற்று அலைவான் என்ற சாபங்களை தேவனிடமிருந்து பெற்றான் – ஆதி 4 :11, 12

• கொலையை மறைத்த பின் தேவன் கேள்வி கேட்ட போது தனக்குத் தெரியாது போன்று பேசினார் – ஆதி 4:9

• இறுதியில் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்காமல் பாதுகாப்பை மட்டுமே கேட்டார் – ஆதி 4:13,14

• கர்த்தர் காயீனுக்கு போட்ட அடையாளம்: ஆதி 4:15 “ கர்த்தர் காயீனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்று போடாதபடிக்குக் கர்த்தர் அவன் மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.”

Related Posts