Menu Close

கானானை வேவுபார்த்த பின் ஜனங்களின் அவநம்பிக்கையும், அதனால் பெற்ற சாபமும்

கானானை வேவுபார்க்கச் சென்ற 12 பேரில் காலேபும், யோசுவாவும் தைரியத்தோடு அந்த தேசத்தை எளிதாய் ஜெயித்து விடலாம் என்றார்கள். மற்ற பத்து பேரும் “அங்கே இராட்சதர்களைப் பார்த்தோம், அவர்கள் முன் வெட்டுக்கிளிகளைப் போல இருந்தோம் என்றார்கள்.” ஜனங்கள் பயந்து அவர்கள் வார்த்தைக்குச் செவி கொடுத்து கலகம் பண்ணினார்கள். கர்த்தர் அந்த ஜனத்தை அழித்து விட சித்தமாயிருந்தார். மோசே ஜனங்களுக்காக பரிந்து பேசினான். ஆனாலும் கோபமுண்டாக்கியவர்கள் யாவரும் அந்த தேசத்தைக் காணமாட்டார்கள் என்றார். அவர்களுடைய அவநம்பிக்கை அவர்களுக்கு அழிவைத் தந்தது – எண் 14:1-24. அதற்கு கர்த்தர் என்ன சாபம் கொடுத்தாரென்றால் நாற்பது நாட்களுக்குப் பதிலாக நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் சுற்றித் திரிய வேண்டுமென்றும் இந்த சந்ததியில் யோசுவாவையும், காலேபையும் தவிர மற்றவர்கள் (இருபது வயதுக்குட்பட்டவர்கள்) வனாந்தரத்தில் மடிவார்கள் என்றும் சபித்தார் – எண் 14:25-38, உபா 1:34-40. நாம் அடையும் அழுகை, வேதனைகள் அவிசுவாசத்தால் தான் ஏற்படுகின்றன.

Related Posts