1. அபிமலேக்கு ஈசாக்கைப் பார்த்து: ஆதி 26:28 “நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்;”
2. லாபான் யாக்கோபைப் பார்த்து: ஆதி 30:27 “உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.”
3. போத்திபார் யோசேப்பைப் பார்த்து: ஆதி 39:3 “கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப் பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு;”
4. சிறைச்சாலைத்தலைவன் யோசேப்பைக் குறித்து: ஆதி 39:23 “கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணின படியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.”
5. பார்வோன் யோசேப்பைக் குறித்து: ஆதி 41 :38 “பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.”
6. சவுல் தாவீதைக் குறித்து: 1 சாமு 18:28 “கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்து கொண்டான்.”
7. இஸ்ரவேல் ஜனங்கள் சாலமோனைக் குறித்து: 1இரா 3:28 “நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.”