மோசே உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனத்தை தன் சொந்த குமாரனுக்குச் செய்வதில் அசட்டையாயிருந்தான். இது மோசேயும், அவனது மனைவியும் தேவனுக்கெதிராக காட்டிய கீழ்ப்படியாமையின் அடையாளமாகும். எனவே அவர்களுடைய மகனுக்கு விருத்தசேதனம் பண்ணும் வரை மோசேயைத் தேவன் மரணத்துக்கேதுவாக வாதித்தார். மோசேயின் மனைவி உடனே தன் மகனின் நுனித்தோல் மாம்சத்தை ஒரு கருக்கான கல்லினால் அறுத்து எறிந்தான். ஆதலால் மரணத்திலிருந்து தப்புவித்தான் – யாத் 4 :24 – 26