Menu Close

கர்த்தர் மாற்றும் காரியங்கள்

1. கர்த்தர் கசப்பை மதுரமாக்குவார்: கர்த்தர் மாராவின் கசப்பை மதுரமாக மாற்றினார் – யாத் 15:23 – 25
2. கர்த்தர் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுவார்: பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார் – உபா 23:5
3. கர்த்தர் இருளை வெளிச்சமாக்குவார்: என் இருளை வெளிச்சமாக்குவார் என தாவீது அறிக்கையிட்டான் – சங் 18:28
4. புலம்பலைக் களிப்பாக மாற்றுவார்: தாவீதின் புலம்பலைக் களிப்பாக மாறப்பண்ணினார் – சங் 30:11
5. கர்த்தர் சிறையிருப்பை மாற்றுபவர்: கர்த்தர் யோபுவின் சிறையிருப்பை மாற்றினார் – யோபு 42:10
6. கர்த்தர் கோணலானவைகளை செவ்வையாக்குவார்: கர்த்தர் கோரேஸ் ராஜாவுக்கு முன்னே போய் கோணலானவைகளை செவ்வையாக்கினார் – ஏசா 45:2
7. கர்த்தர் காலங்களையும், சமயங்களையும் மாற்றுவார்: நேபுகாத்நேச்சாரின் காலங்களையும் சமயங்களையும் மாற்றினார் – தானி 2:21
8. கர்த்தர் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார்: உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று இயேசு கூறினார் – யோ 16:20

Related Posts