1. கோழையானவனை பராக்கிரமசாலி என அழைத்து உற்சாகமூட்டுகிறார் – நியா 6:12
2. ஊழியத்துக்கு அழைத்து ஊழியத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் அறிவிக்கிறார் – நியா 6:14
3. மனிதன் தன் இயலாமையைக் கூறும்போது தாம் அவனுடன் இருப்பதாக வாக்குறுதி அளித்து வெற்றி உறுதி என தைரியப்படுத்துகிறார் – நியா 6:15,16
4. அடையாளம் கேட்டால் அடையாளம் தருகிறார் – நியா 6:17 – 21
5. பயப்படும்போது சமாதானமளிக்கிறார் – நியா 6:23
6. முதலாவது சிறு வேலை கொடுத்து பெரிய வேலைக்குப் பழக்குவிக்கிறார் – நியா 6:25 – 27
7. பெரிய ஊழியம் செய்யும் வேளை வரும்போது ஆவியானவரை அவன் மேல் இறங்கச் செய்கிறார் – நியா 6:34
8. அவன் கேட்கும் அடையாளங்களை நிறைவேற்றி விசுவாசத்தை வளரச் செய்கிறார் – நியா 6:36 – 40
9. பயமுள்ளவர்களை நீக்குகிறார் – நியா 7:3
10. கர்த்தரை முழுமனதோடு பின்பற்றாதவர்களிடமிருந்து விலக்குகிறார் – நியா 7:4 – 7
11. சிறு சேனையைக் கொண்டு திரளான சேனையை எதிர்த்துப் போரிடுவதற்கு தைரியம் அளிக்கிறார் – நியா 7:9 – 14.
இவ்விதமாக ஒரு மனிதனுக்கு அளித்து ஊழியத்தில் நிறுத்துகிறார்.