Menu Close

கர்த்தர் கொடுத்த அடையாளங்கள்

1. கர்த்தர் நோவாவுடன் உடன்படிக்கை பண்ணி வானவில்லை அடையாளமாகக் கொடுத்தார் – ஆதி 9:12, 13
2. கர்த்தர் எகிப்தியருக்கு வாதைகளைக் கொடுக்கும்போது தனது பிள்ளைகளை அழிக்காமலிருக்க ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை அடையாளமாக தெளிக்கச் சொன்னார் – யாத் 12:7, 13
3. கர்த்தர் கலகக்காரருக்கு அடையாளமாக துளிர்த்த ஆரோனின் கோலை சாட்சிப் பெட்டிக்குமுன் வைக்கச் செய்தார் – எண் 17:10
4. தேவனுடைய குமாரன் என்பதற்கு அடையாளமாக இயேசு ஞானஸ்நானம் எடுக்கும் பொழுது தேவஆவி இயேசுவின் மேல் புறாவைப் போல் இறங்கச் செய்தார் – மத் 3:16
5. கிதியோன் “இஸ்ரவேலை நான் இரட்சிப்பேனானால் எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்ட வேண்டும்” என்று கேட்டான். கர்த்தர் மயிருள்ள தோலை களத்தில் போட வைத்து பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருக்கும்படி அவன் கேட்ட அடையாளத்தைக் காட்டினார் – நியா 6:37
6. தாவீதின் வம்சத்தில் யோசியா பிறப்பதற்கு அடையாளமாக பலிபீடம் வெடிக்கச் செய்து அதிலுள்ள சாம்பலைக் கொட்டச் செய்தார் – 1இரா 13:2, 3
7. எசேக்கியேல் மரணத்திலிருந்து பிழைப்பார் என்பதற்கு அடையாளமாக அவர் கேட்டபடி சூரியபாகையை பத்து பாகை பின்னிட்டுப் போகும்படி செய்தார் – 2இரா 20:9, 10
8. இமானுவேல் பிறப்பதற்கு அடையாளமாக கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவன் தான் இமானுவேல் என்றார் – ஏசா 7:14
9. கர்த்தர் தமது ஜனங்களின் மகிழ்ச்சிக்கு நித்திய அடையாளமாக முட்செடிக்குப் பதிலாக தேவதாரு விருட்சத்தை முளைக்கச் செய்வார். காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச் செடியை எழும்பச் செய்வார் – ஏசா 55:13
10. கிறிஸ்து எங்கு பிறப்பார் என்பதற்கு அடையாளமாக “பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணியிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.” – லூக் 2:12

Related Posts