• ஆமோ 7:7 –9 “கர்த்தர் ஆமோசுக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின் கீழ் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.”
• “கர்த்தர் ஆமோசை நோக்கி, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என் ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்க மாட்டேன்.”
• “ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த ஸ்தலங்கள் அவாந்தரமுமாக்கப்படும்; நான் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பி வருவேன் என்றார்.” (இதிலிருந்து தேவன் ஜனங்களை பரிசோதிக்கிறவர் என்றும், பொல்லாத இருதயத்தாரைக் கண்டால் தண்டிக்காமல் விடமாட்டார் என்றும் அறியலாம்.)