கர்த்தர் ஆமோசிடம் பழுத்த பழங்கள் நிறைந்த கூடையைக் காட்டினார். பழுத்த பழம் என்பது கோபாக்கினைக்கு மக்கள் தகுதியுள்ளவர்களாயிருந்தனர் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் முடிவு சமீபமாயிருந்தது. கர்த்தர் அவர்கள் தேசத்தை அதிரப்பண்ணுவேன் என்றும், அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கப் பண்ணுவேன் என்றும், அவர்கள் பண்டிகைகளை துக்கிப்பாகவும், பாட்டுகளை புலம்பலாகவும், அவர்களுடைய சகல அறைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவிப்பேன் என்றும், அவர்களுடைய முடிவை கசப்பான நாளாக்குவேன் என்றும், கர்த்தருடைய வசனத்தைக் கேட்கக் கூடாத பஞ்சத்தை அனுப்புவேன் என்றும், அவர்கள் அந்த வசனத்தைத் தேடி அலைந்தும் கண்டடையாமற் போவார்கள் என்றும், அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க மாட்டார்கள் என்றும் கர்த்தர் சொல்லுகிறார் – ஆமோ 8:1 – 14 (இஸ்ரவேலின் நியாயத்தீர்ப்புக்கான காலம் கனிந்து விட்டது என்பதை இது காட்டுகிறது.)