Menu Close

கர்த்தர் ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஆசிகள்

• சங் 34:22 “கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.”
• சங் 35:27 “கர்த்தர் தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிறவர்.”
• சங் 135:14 “கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.”
• ஏசா 54:17 “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.”
• ஏசா 56:5 “கர்த்தர் ஊழியர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும், குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும் பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.”
• ஏசா 65:14 “என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்.”
• யோவே 2:29 “ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.”
• ஆமோ 3:7 “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.”
• ஆகா 2:23 “என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்து கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.”
• யோவா 12:26 “ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார்.”
• எபி 1:7 “கர்த்தர் தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜீவாலைகளாகவும் செய்கிறார்.”

Related Posts