1. யாக்கோபு: யாக்கோபு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும், உலகப்பிரகாரமான ஆசீர்வாதத்தையும் விரும்பினார். கர்த்தருடைய ஆசீர்வாதத்தையும், தகப்பனுடைய ஆசீர்வாதத்தையும் தேடினார். அதனால் யாப்போக்கின் ஆற்றின் கரையில் கர்த்தரோடு போராடி ஜெபித்து வெற்றி பெற்றான். கோலும், தடியுமாக யோர்தானைக் கடந்தவன் இரண்டு பரிவாரங்களை உடையவனானான் – ஆதி 32:10
2. யோசேப்பு: யோசேப்பு பல வருடங்கள் சிறைச்சாலையில் பாடு அனுபவித்தாலும், கர்த்தர் மனதுருகி, தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்திய ரூபனுடைய சேஷ்டபுத்திர பாகத்தை யோசேப்புக்குக் கொடுத்து யோசேப்பை இரண்டு மடங்கு ஆசீர்வதித்தார் – 1நாளா 5:1
3. யோபு: யோபின் சொத்துக்கள், மிருகஜீவன்கள் அனைத்தையும் சாத்தான் அழித்தான். அவனுடைய பத்து பிள்ளைகளும் மரித்தார்கள். பயங்கரமான நோய்களும், போராட்டங்களும் வந்தன. ஆனால் கர்த்தர் முன்னிலமையைப் பார்க்கிலும் பின்னிலைமையை ஆசீர்வதித்தார். இரண்டந்தனையாக கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார் – யோபு 42:10, 12, 13
4. எலிசா: எலிசா ஆவியின் வரங்களுக்காக ஏங்கினார். ஏர்மாடுகளை விட்டார். உறவினர்களை மறந்தார். எலியாவின் மேலிருந்த ஆவியின் வரம் தமக்கு இரட்டிப்பாக கிடைக்க வேண்டும் என வாஞ்சித்து அந்த ஏக்கத்தில் எலியாவின் பின்னாலே சென்று பெற்றுக் கொண்டான் – 2இரா 2:9