1. கர்த்தர் ஈசாக்கைப் பலியிட ஒப்புக்கொடுத்தபோது கர்த்தர் அதற்குப் பதில் ஒரு ஆட்டுக்குட்டியை ஆயத்தப்படுத்திக் கொடுத்தார் – ஆதி 22:13
2. இஸ்ரவேல் ஜனங்களைக் காத்துக்கொள்ள அவர்களைக் கானானில் கொண்டு சேர்க்க கர்த்தர் ஒரு தூதனை ஆயத்தப்படுத்தினார் – யாத் 23:20
3. சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்திக் கொடுத்தார் – சங் 23:5
4. யோனா தீர்க்கதரிசியைக் கடலின் கொந்தளிப்பிலிருந்து காப்பாற்ற ஒரு மீனை ஆயத்தப்படுத்தினார் – யோனா 1:17
5. இயேசு தமது விசுவாசிகளுக்காக ஒரு நகரத்தை ஆயத்தப்படுத்தினார் – எபி 11:16
6. இயேசு தமது விசுவாசிகளுக்காக ஒரு ராஜ்ஜியத்தை ஆயத்தம் பண்ணினார் – மத் 25:34
7. இயேசு நமக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்கிறார் – யோ 14:2