Menu Close

கர்த்தர் ஆபிரகாமுக்குக் கொடுத்த ஆசிகள்

1. ஆதி 12:2,3 “நான் உன்னை பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.”

2. ஆதி 12:7 “உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்றார்.”

3. ஆதி 13:14-16 “உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.”

4. “நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,”

5. “உன் சந்ததியைப் பூமியின் தூளைப் போலப் பெருகப் பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.”

6. ஆதி 15:1, 4, 5, 18-21, “நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.”

7. “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்.”

8. “நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.”

9. “அந்நாளிலே கர்த்தர் ஆபிரகாமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவங்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்,”

10. “கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,”

11. “ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,”

12. “எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்த தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.”

13. ஆதி 17:2, 4, 6 “உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப் பண்ணுவேன் என்றார்.”

14. “நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.”

15. “உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.”

16. ஆதி 22:17,18 “நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்த்தரித்துக் கொள்ளுவார்கள் என்றும்,”

17. “நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என் பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.”

Related Posts