1. அறியப்படாத துரவு: ஆபிரகாமின் அடிமைப்பெண்ணான ஆகார் தன் பிள்ளை தாகத்தினால் பெயர்செபா வனாந்தரத்தில் சாகப் போகிறதைப் பார்க்க முடியாமல் தள்ளி நின்று அழுதாள். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அவள் தண்ணீர் துரவைக் கண்டு பிள்ளையின் தாகத்தைத் தீர்த்தாள் – ஆதி 21:19
2. அறியப்படாத மரம்: இஸ்ரவேல் ஜனங்கள் தண்ணீரில்லாமல் மூன்று நாள் கஷ்டப்பட்டு சூர் வனாந்தரத்திலுள்ள கசப்பான தண்ணீருள்ள மாராவுக்கு வந்தனர். எனவே ஜனங்கள் முறுமுறுத்தனர். மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது கர்த்தர் அறியப்படாத மரத்தைக் காண்பித்தார். அதை வெட்டி தண்ணீரில் போட்டபோது தண்ணீர் இனிப்பானது – யாத் 15:25
3. அறியப்படாத ஆட்டுக்குட்டி: ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட முற்பட்டபோது கர்த்தர் தடுத்து நிறுத்தினார். அப்பொழுது ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது அறியப்படாத ஒரு ஆட்டுக்குட்டியைப் பார்த்து அதை ஈசாக்குக்குப் பதிலாக பலியிட்டார் – ஆதி 22:13
4. அறியப்படாத பலிபீடம்: பவுல் அந்தேனே பட்டணத்தில் “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருந்த ஒரு பலிபீடத்தைக் கண்டு, அந்த மக்களிடம் நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அந்த தெய்வத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றனர் – அப் 17:23
5. அறியப்படாத கன்மலை: இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் வழிநடந்தபோது, அவர்களை அறியாத ஒரு கன்மலை அவர்களைப் பின் தொடர்ந்தது – 1கொரி 10:4
6. அறியப்படாத ஏணி: யாக்கோபுக்கு தேவன் பெத்தேலில் தரிசனமாகி பூமியிலே வைக்கப்பட்டு, வானத்தை எட்டியிருந்த ஒரு ஏணியைக் காண்பித்தார். கர்த்தர் யாக்கோபுக்கு தூரமாயல்ல சமீபமாயிருப்பதையே அந்த ஏணி காண்பித்தது – ஆதி 28:12