தாவீது ஒபேத்ஏதோமின் வீட்டிலிருந்து கர்த்தருடைய பெட்டியை தாவீதின் நகரத்திற்குக் கொண்டு வரும்போது, தான் சணல் நூல் ஏபோத்தைத் தரித்துக் கொண்டு கர்த்தருக்கு முன்பாக நடனமாடினான். இதைப்பார்த்த அவனுடைய மனைவியாகிய மீகாள் அவனை அவமதித்துப் பேசினாள். அதற்கு தாவீது “ நான் என்னை கர்த்தருடைய ஜனத்தின் மேல் தலைவனாகத் தெரிந்து கொண்ட கர்த்தருடைய சமூகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்” என்றான். அதனால் மீகாளுக்கு மரணமடையும் வரை பிள்ளை இல்லாதிருந்தது – 2சாமு 6:12 – 23