பிடித்ததினால் :
1. பெலிஸ்தியர் தேவனுடைய பெட்டியை பிடித்து தாகோன் கோவிலில் வைத்தார்கள். அதனால் அஸ்தோத் ஊராரையும், அதன் எல்லைக்குள் இருக்கிறவர்களையும் கர்த்தர் மூலவியாதியினால் வாதித்தார் – 1சாமு 5:1 – 6
2. மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி பிடித்தான். உடனே தேவ கோபம் அவனிடமாய்த் திரும்பி தேவன் அங்கே அவனை அடித்தார். அங்கே அவன் தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான் – 2சாமு 6: 6, 7
பார்த்ததினால்: 1சாமு 6:19 “பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபது பேரை அடித்தார்;”
தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டபோது நடந்தது: ஏலி மல்லாக்க விழுந்து பிடரி முறிந்து செத்தான் – 1சாமு 4:18
ஓப்னியும், பினெகாசுமாகிய ஏலியின் மக்கள் இறந்தனர். 1சாமு 4:11
பினெகாசின் மனைவி பிரவசித்தில் இறந்தாள் – 1சாமு 4:19