1. கர்த்தருடைய தூதன் சூர் வனாந்தரத்தில், சாராயை விட்டு ஓடிப்போகிறேன் என்று கூறும் ஆகாரைக் கண்டு, “உன் நாச்சியாரண்டைக்குப் போய் அடங்கியிரு” என்றும், “உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்“ என்றும், “நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்” என்றும், “அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடு” என்றும் “அவன் துஷ்டனாயிருப்பான்” என்றும் கூறினான் – ஆதி 16:7 – 13
2. ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் முன்பாக மூன்று புருஷர்கள் நின்றார்கள். அவர்கள் ஆபிரகாமை நோக்கி “உற்பவ காலகட்டத்தில் நாங்கள் திரும்பி வருவோம் அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்.” என்றான் – ஆதி 18:2, 10, 14
3. லோத்தின் குடும்பத்தை சோதோமின் அழிவிலிருந்த்து காப்பாற்ற அவன் வீட்டுக்குப் போய் அவனையும், அவன் மனைவியையும், இரண்டு பிள்ளைகளையும் கையைப் பிடித்து பட்டணத்துக்கு வெளியே கொண்டுபோய் விட்டனர் – ஆதி19:1 – 24
4. ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடச் சென்றபோது அவனை வெட்ட கையை ஓங்கியபோது தூதன் “ஆபிரகாமே, ஆபிரகாமே” என அழைத்துப் பலியிட வேண்டாம் என்று தடுத்து அதற்குப் பதில் ஒரு ஆட்டுக்குட்டியைக் காண்பித்தார் – ஆதி 22:11 – 17
5. யாக்கோபுக்குத் தூதன் சொப்பனத்தில் தோன்றி அவனுடைய ஆடுகள் எப்படிப் பிறக்கும் என்றான் – ஆதி 31:11 – 13, 32:1
6. யாக்கோபோடு தூதன் போராடி அவன் பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார் – ஆதி 32:24 – 28
7. மோசேக்கு எரியும் முட்செடியில் தூதன் தோன்றி தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்றார் – யாத் 3:2
8. மோசேக்குக் கற்பலகைகளைப் பெற்றுக் கொள்ள தூதர்கள் உதவினர் – அப் 7:38
9. இஸ்ரவேலரை அக்கினிஸ்தம்பமாய், மேகஸ்தம்பமாய் தூதன் முன்னின்று நடத்தினார் – யாத் 13:22
10. கர்த்தருடைய தூதன் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து இஸ்ரவேலர் அனைவரோடும் பேசினார் – நியா 2:1 – 4
11. தூதன் பிலேயாமிடம் தவறான வழியில் அவன் போவதைக் குறித்துப் பேசினார் – எண் 22:22 – 36
12. தூதன் உருவின பட்டயத்துடன் யோசுவாவுக்கு முன் வந்து “கால்களிலுள்ள பாதரட்சைகளைக் கழற்றிப் போடு” என்றார் – யோசு 5:13
13. தாவீது இலக்கம் பார்த்துப் பாவம் செய்தபோது தூதன் 70000 இஸ்ரவேலரை சாகடித்தார் – 2சாமு 24:15,16, 17
14. எலியாவிற்கு ஆகாரமும் தண்ணீரும் கொடுத்து என்ன செய்ய வேண்டும் என்றார் – 1இரா 19:5 – 7, 2இரா 1:15
15. ஒருநாள் இரவில் 1 85 000 அசரீயர்களை சங்கரிக்கும்படி ஒரு தூதனை எசேக்கியேல் ராஜாவுக்கு அனுப்பினார் – 2இரா 19:35
16. கிதியோனுக்கு தூதன் கர்வாலி மரத்தின் கீழ் காட்சியளித்தார் – நியா 6:11
17. தூதன் கிதியோனிடம் “நீ இஸ்ரவேலரை மீதியானியரின் கைக்கு நீக்கலாக்கி இரட்சிப்பாய்” என்றார் – நியா 6:11 – 14
18. யோசேப்புக்குத் தூதன் தோன்றி “மரியாளின் கர்ப்பத்தில் உண்டானது பரிசுத்த ஆவியால் உண்டானது” என்றார் – மத் 1:20
19. தூதன் யோசேப்புக்குக் காணப்பட்டு “ஏரோது இயேசுவைக் கொலைசெய்யத் தேடுவான் எனவே நான் சொல்லும்வரை பிள்ளையையும் தாயையும் எகிப்துக்குக் கூட்டிக் கொண்டுபோ” என்றார் – மத் 2:13
20. தானியேலை சிங்கங்கள் சேதப்படுத்தாதபடி கர்த்தர் ஒரு தூதனை அனுப்பி காப்பாற்றினார் – தானி 6:22
21. 3 எபிரேய வாலிபர்களுக்காக ஒரு தூதனை அனுப்பி அக்கினிச் சூளையிலிருந்து காப்பாற்றினார் – தானி 3:20, 28
22. சகரியா தீர்க்கதரிசிக்குத் தூதன் வெளிப்பாடுகளையும், தரிசனங்களையும் தந்தார் – சக 1:9, 11, 19 3:1-6, 4:1 – 5, 5, 10, 6:4, 5
23. மனோவாவுக்குத் தூதன் தரிசனமாகி அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றார் – நியா 13:3 – 21