Menu Close

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பு செய்த ராஜாக்கள்

1. சவுல்: சவுல் கர்த்தருடைய வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான் – 1சாமு 15: 11
2. தாவீது: தாவீது உரியாவின் மனைவி பத்சேபாளுடன் சேர்ந்தான் – 2சாமு 12:9
3. சாலமோன்: சாலமோன் அந்நிய தேவர்களைப் பின்பற்றினான் – 1இரா 11:9
4. நாதாப்: நாதாப் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யத் தூண்டினான் – 1இரா 15:25, 26
5. பாஷா: பாஷா இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணினான் – 1இரா 15: 33, 34
6. உம்ரி: உம்ரி கேடாய் நடந்தான் – 1இரா 16:25
7. ஆகாப்: ஆகாப் ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம் பண்ணி, விக்கிரகதோப்பையும் உண்டாக்கினான் – 1இரா 16:30 – 33
8. அகசியா: அகசியா ஆகாபோடு சம்பந்தங் கலந்து ஆகாபின் வழியில் நடந்தான் – 2இரா 8:26, 27
9. யெரோபெயாம்: யெரொபெயாம் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணினான் – 2இரா 14:23, 24
10. சகரியா: சகரியா, யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் இருந்தான் – 2இரா 15:8, 9
11. மெனாகேம்: மெனாகேம் யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான் – 2இரா 15:17,18
12. பெக்காகியா: பெக்காகியா யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான் – 2இரா 15:23, 24
13. பெக்கா: பெக்கா யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான் – 2இரா 15:27, 28
14. யோயாக்கீம்: யோயாக்கீம் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் – 2நாளா 36:5
15. ஆகாஸ்: ஆகாஸ் பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்.
2நாளா 28: 1, 2
16. யோயாக்கீன்: யோயாக்கீன் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் – 2 நாளா 36:9
17. சிதேக்கியா: சிதேக்கியா கர்த்தரிடம் திரும்பாதபடிக்கு தன் கழுத்தை அழுத்தமாக்கினான் – 2நாளா 36:11 – 13
18. ஆமோன்: ஆமோன் தன் தகப்பன் பண்ணுவித்த விக்கிரகங்களுக்கெல்லாம் பலியிட்டு அவைகளைச் சேவித்தான் – 2நாளா 33:21, 22

Related Posts