1. மோசேயின் கையில் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் தேவன் தாமே எழுதிக் கொடுத்தார் – யாத் 32:15,16 உபா 4:13 9:9 – 12
2. தாவீது தேவாலயம் கட்ட நினைத்தபோது அந்த ஆலயத்தின் அளவுகள் கர்த்தரின் கரத்தினால் எழுதப்பட்டுத் தாவீதின் கையில் கொடுக்கப்பட்டது – 1நாளா 28:19
3. பெல்ஷாத்ஷார் தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பொருட்களைத் தீட்டுப்படுத்தினார். அப்பொழுது கர்த்தர் கையுறுப்பை அனுப்பி சுவரில் எழுதினார். அந்த கையுறுப்பு “மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்” என்று எழுதியது – தானி 5:25, 26 இதை தானியேல் மட்டும் வாசித்தார்.
4. ஒரு விபச்சார ஸ்திரீயைத் தண்டிக்க இயேசுவிடம் வந்தபோது, இயேசு சுற்றி நின்றவர்களைப் பார்த்து “உங்களில் பாவமில்லாதவன் முதலில் கல்லெறியக்கடவன்” என்று கூறி தரையில் எழுதினார். அவர் என்ன எழுதினார் என்று திட்டமாகத் தெரியாவிட்டாலும் கிறிஸ்துவின் மன்னிப்புச் செய்தியாக அது வெளிப்படுகிறது – யோ 8:3 – 11
இவைகள் போக:
1. மனந்திரும்புகிறவர்களின் இருதயத்தில் எழுதுகிறார் – எபி 8: 10, 10:16
2. ஜீவபுஸ்தகத்தில் தமது ஜனங்களின் பெயர்களை எழுதுகிறார் – சங் 87:6, வெளி 21:27, பிலி 4:3
3. தனது ஜனங்களை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார் – ஏசா 49:16