1. யோசேப்பு:
ஆதியாகமம் 41:39 “யோசேப்பைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.”
2. சாலமோன்:
1 இராஜாக்கள் 3:12 “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.”
3. தானியேல்:
தானியேல் 1:20 “நேபுகாத்நேச்சாரின் ராஜ்ஜியம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் தானியேலை, அனனியாவை, மிஷாவேலை, அசரியாவை பத்து மடங்கு சமர்த்தாகக் கண்டான்.”
4. தாவீது:
1 சாமுவேல் 18:15 “தாவீது மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்திருந்தான்.”
5. பெசலயேல்:
யாத்திராகமம் 35:33 “கர்த்தர் பெசலயேலுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார்.”
6. ஸ்தேவான்:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:10 “ஸ்தேவான் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்து நிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.”
7. அபிகாயில்:
1 சாமுவேல் 25:3 “அபிகாயில் மகாபுத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்.”
8. யோனத்தான்:
1 நாளாகமம் 27:32 “தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தான்.”