• ஆகார்: ஆதி 21:19 “தேவன் ஆகாருடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.”
• பிலேயாம்: எண் 22:31 “அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.”